தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்: தமிழிசை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement


தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என்றும், அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ் எனவும் பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை ‌சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில்  தமிழிசை ‌சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியை கொண்டு வருவதே பாரதிய ஜனதாவின் நோக்கம் என்றும், ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாரதிய ஜனதா எனவும் அவர் கூறினார். தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என்றும், அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ் எனவும் பேசினார். பிரதமர் மோடி குறித்து குறை சொல்லும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பதவியில் இருந்தபோது தமிழகத்திற்காக என்ன செய்து விட்டார் என கேள்வி எழுப்பிய தமிழிசை, கட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு எப்படி முதல்வராவார் என விமர்சித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement