[X] Close >

குவைத்தில் 8 நாட்களாக நிறுவனத்தில் அடைபட்டிருக்கும் இந்திய ஊழியர்கள்

Indian-employees-in-Kuwait-have-been-in-the-company-for-8-days

குவைத்தில் உள்ள ஒப்பந்ததார நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, அந்நிறுவனம் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Advertisement

குவைத்தில் கராஃபி நேஷ்னல் எனும் ஒப்பந்ததார நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் இந்தியர்களில், 4 ஆயிரத்து 700 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஊதியம் தொடர்பான பிரச்னை நீடித்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்திய தூதரகத்தின் நடவடிக்கையின் பேரில் 160 பேருக்கு மட்டும் முதற்கட்டமாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

பெரும்பாலான ஊழியர்கள் போதிய உணவின்றி முகாமில் அடைபட்டிருக்கிறார்கள். கடந்த 8 நாள்களாக நிறுவன அலுவலகத்துக்குள்ளேயே ஏராளமான ஊழியர்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க வலியுறுத்தும் ஊழியர்கள், இவ்விவகாரத்தில் இந்தியத் தூதரகம்‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close