இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை நாட்டுப் படகில் சுமார் ஐந்தரை கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இதனை கீழக்கரையைச் சேர்ந்த நசீர் என்பவர் படகிலிருந்து கடற்கரைப் பகுதிக்கு எடுத்து வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற அவர்கள் நசீரை பிடித்தனர். அவரிடமிருந்த ஐந்தரைக் கிலோ தங்கமும், நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நசீரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு நசீருக்கு உதவியவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!