'தானா சேர்ந்த கூட்டம்' சூர்யாவின் பாதி டப்பிங் முடிந்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின்  சூர்யாவின் முதல்பாதி டப்பிங் பணி நிறைவடைந்துள்ளது.


Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து  நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது' என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இப்பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் முதல் பாதி சூர்யாவின் டங்பிங் பணி முடிவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் டப்பிங் பேசும் சூர்யாவின் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.  2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப்  படத்தை  தயாரித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement