அரசை கேலி செய்யாமல் மக்களுக்கு உதவுங்கள்: கமல் வேண்டுகோள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசை கேலி செய்யாமல் மக்களுக்கு மழைக்கால உதவிகளை செய்யுமாறு தனது இயக்கத் தொண்டர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு ட்விட்டர் பதிவில், சென்னையில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சீருடை அணிந்த காவலர்கள் மட்டுமல்லாது மற்ற சீருடை அணியாத தமிழர்கள் அதிக அளவில் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். காவலர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

       

loading...

Advertisement

Advertisement

Advertisement