சடலத்துடன் ஆற்றைக் கடக்கும் மக்கள்: இணைப்பு பாலம் அமைத்து தர கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இணைப்பு பால வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்களை தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கி கடந்து எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றால், கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு கொண்டுசெல்ல ராஜன் வாய்க்கால் ஆற்றை கடக்க வேண்டும். கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் ராஜன் வாய்க்கால் ஆற்றில் தண்ணீர் செல்கிறது.

இந்நிலையில் குமாரமங்கலத்தை சேர்ந்த ராஜப்பன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை உடலை உடலை அடக்கம் செய்ய ராஜன் வாய்க்காலை கடக்க பாலம் இல்லாததால், ராஜப்பனின் சடலத்துடன் ஆற்றில் இறங்கிய அவரது உறவினர்கள் நீரோட்டத்தைக் கடந்து, சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இதே நிலை நீடிப்பதாக கூறும் கிராம அவர்கள், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். மயானத்திற்கு செல்லும் பாதையை சீரமைக்காவிடில், அதனை வேறு பகுதிக்கும் மா‌ற்றித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement