பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நாராயணசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், இரண்டாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கனமழையின்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்கவைப்பதற்கு தேவையான இடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement