2ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது? - சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது

the-verdict-date-of-2G-spectrum-scam-will-be-announced-on-today

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.


Advertisement

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ1,76,000 கோடி இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை குற்றம்சாட்டியது. இதுநாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

பின்னர் கடந்த ஜூலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி ஆகஸ்ட் 25-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார். ஆனால்,  செப்டம்பர் 20-ந் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். வழக்கின் முழு ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை தள்ளி வைப்பதாக நீதிபதி கூறினார். தமிழக அரசியல் களம் மிகவும் பரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படுமானால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement