15 நாய்களை கொன்ற அதிமுக பிரமுகர்: விலங்குகள் நலவாரியத்தினர் புகார்

AIADMK-leader-who-killed-15-dogs--Animal-welfare-complains

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் 15 தெரு நாய்களை விஷம் வைத்துக்கொன்ற அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தினர் புகார் அளித்துள்ளனர்.


Advertisement

அதிமுக பிரமுகர் அண்ணாதுரை என்பவர் தன் வீட்டில் வளர்க்கும்‌ கோழிகளை தெரு நாய்கள் துரத்துவதால் ஆத்திரமடைந்து, இறந்த கன்றுகுட்டியின் உடலில் விஷத்தை வைத்து வயல்வெளியில் வீசியதாக கூறப்ப‌டுகிறது. இதனை உட்கொண்ட சுமார் 15 தெரு நாய்கள் அப்பகுதியில் இறந்து கிடந்துள்ளன. இறந்த நாய்களின் துர்நாற்றம் அதிகமானதை அடுத்து, அப்பகுதியில் உள்ளவர்கள் தேசிய விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இறந்த நாய்களின் உடல்கள் மற்றும் கன்றுக்குட்டியின் உடலை கண்டறிந்தனர். கன்றுக்குட்டியின் இறைச்சியை உண்ட மேலும் சில நாய்கள், காகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விலங்குகள் நலவாரியத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement