அதிமுக நண்பர்கள் விரைவில் பாரதிய ஜனதாவில் இணைவார்கள்: நயினார் நாகேந்திரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுகவில் உள்ள ஏராளமான நண்பர்கள் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார்கள் என சமீபத்தில் பாஜகவில்  இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 


Advertisement

அதிமுக ஆட்சி காலத்தில் 2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் அமைச்சராகவும் இருமுறை திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் நயினார்நாகேந்திரன். இவர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். 

நெல்லையில் உள்ள பாஜக கட்சியின் அலுவலகத்திற்கு வந்த அவரை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்க‌ளுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவருக்குமே கொள்கைகள் கிடையாது. பாரதீய ஜனதாவில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற வலுவான தலைவர்கள் உள்ளனர். தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்கள் உள்ளனர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், ஏராளமான அதிமுக நண்பர்கள் விரைவில் பாரதிய ஜனதாவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார். 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement