பஞ்சாப், ஹரியானா வன்முறையில் 11 பேர் பலி; 200 காயம்: ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் குற்ற வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் காயமடைந்துள்ளனர்.


Advertisement

பெண் பக்தர்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ராம் ரஹீம் மீது சிபிஐ வழக்குப் பதிந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்பு தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பதை ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது. மேலும், பாபா ராம் ரஹீமுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை விபரங்கள், வரும் 28 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாபா ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதன் எதிரொலியாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. பாபா ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது. இருப்பினும் வன்முறையில் 11 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement