[X] Close >

இபிஎஸ் அணியின் விழாவில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

MLA-supports-TTV-participated-in-EPS-Events

வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் பங்கேற்றனர்.


Advertisement

தமிழக அரசு சார்பில் மாவட்டம்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான கொண்டாட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோஃபர் கபில், உதயகுமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களோடு, டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களான ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணிய‌ம், சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரும் பங்கேற்றனர். தொடர்ந்து விழா தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்த மூன்று எம்எல்ஏ-க்களும், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனும் கலந்து கொண்டனர்.


Advertisement

பின்னர், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஆம்பூர் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியம், “நாங்கள் என்றுமே பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆதரவாளர்கள் தான். டிடிவி தினகரனின் அறிவுறுத்தலின் பேரிலேயே மரியாதை நிமித்தமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close