குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

Tamilnadu-cm-palanisamy-went-to-delhi-to-attend-vice-president-oath-function

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.


Advertisement

துணைக் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ‌முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் இன்று இரவு தமி‌ழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் வெங்கய்யா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அதன்பின் 11:00 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், நீட் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement