ஒட்டு மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் இலக்குக்குள் வந்திருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், ஜப்பான் நாட்டின் கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடியது என்று அமெரிக்கா, தென்கொரியா கூறியுள்ள போதிலும், இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என்று ரஷ்யா கூறியுள்ளது.
இதற்கிடையில், ஒட்டு மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் இலக்குக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகவும் ஏவுகணையை உருவாக்கியவர்களை அவர் பாராட்டியதாகவும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!