[X] Close

‘கலெக்டரா இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது’ - முகக்கவசம் அணியாததோடு காவலரை மிரட்டிய பெண்!

Subscribe

தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதமா எனக்கேட்டு ஆட்சியரை ஒருமையில் பேசி, காவலரை மிரட்டிச்சென்றுள்ளார்.


Advertisement

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பெண்ணை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவலரை பார்த்து, இத்துனோண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் கட்ட சொல்றிங்களே? அசிங்கமா இல்லையா? என கேள்வி கேட்டார். மேலும் அந்த பெண் ஆவேசமாக பேசியதை பணியில் இருந்த சக காவலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.


Advertisement

அவரிடம் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுறியா போடு, என்னை ஒன்றும் செய்ய முடியாது என தகாத வார்த்தைகளால் தெனாவட்டாக பேசி தோளில் போட்டிருந்த ஷாலை இழுத்து விட்டு கொண்டு நானும் ரவுடிதான் என கூறி மிரட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close