[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

நார்வேயின் 2வது மிகப் பெரிய பாலம் திறக்கப்பட்டது 

norway-s-second-largest-bridge-built-by-china

நார்வேயில் நேற்று இரண்டாவது பெரிய பாலம் திறக்கப்பட்டது. இந்தத் தொங்கு பாலம் நார்வேயின் ஆர்டிக் சிட்டிக்குள் கட்டப்பட்டும் இரண்டாவது பெரிய தொங்கு பாலமாகும். நார்விக்கின் வடக்கு போர்ட் சிட்டியில் உள்ள ஹோலாகலந்த் பாலமே மிகப்பெரிய தொங்கு பாலமே ஆர்க்டிக் வளையதுக்குள்ளான மிகப்பெரிய பாலமாக அறியப்படுகிறது. சீனாவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்தப் பாலம் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 1533 மீட்டராகும்.

சீனாவின் எஸ்.ஆர்.பி.ஜி என்ற நிறுவனமே இந்தப் பாலத்துக்கான  இரும்புகளை இறக்குமதி செய்து பாலத்தையும் கட்டியுள்ளது. பாலத்தின் திறப்பு குறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்தப் பாலத்தின் திறப்புக்காக நீண்ட வருடங்களாக காத்திருந்தோம். இந்தப் பாலம் வந்தது எங்கள் அதிருஷ்டம். மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

பாலத்தின் திறப்பு விழாவில் பேசிய நார்வேயின் பிரதமர் எர்னா சோல்பேர்க், சீனாவின் உதவியோடு இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தத் திட்டத்தில் சீனாவின் பங்களிப்பு சிறப்பானது. இப் பாலம் முழுமையடைந்து அழகாக காட்சியளிக்கிறது. இந்தத் பகுதி மக்களின் வாழ்க்கைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பாலம் திறப்பு குறித்து பேசிய நார்வேவுக்கான சீனத் தூதர், இது நார்வேவுக்கும் சீனாவுக்குமான உறவை மேலும் பலப்படுத்தும் என்று தெரிவித்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close