[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

அகுங் எரிமலை: சீற்றத்திலும் கோயில் அருகில் வராத எரிமலை குழம்பு!

bali-agung-volcano-eruption-lava-didnt-touch-the-temple

இந்தோனேசியாவில் எரிமலைச் சீற்றத்தால் பாலித் தீவின் சுற்றுலாத் துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்தச் சிக்கல் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது. சீறிக் கொண்டிருக்கும் அகுங் எரிமலை, பாலித் தீவின் புவியியல் அமைப்பில் முக்கியப் பங்கு வகுக்கிறது.

இந்தோனேசியாவின் பாலித் தீவின் காலநிலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அகுங் எரிமலை. முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலியின் மிக உயரமான பகுதி அகுங் மலைதான். அருகில் உள்ள தீவுகளில் இருந்துகூட அகுங் மலையின் உச்சியைப் பார்க்க முடியும். இதிகாசங்களில் கூறப்படும் மேரு மலையின் இன்னொரு வடிவமாகவே அகுங் எரிமலையை பாலித் தீவு மக்கள் நம்புகிறார்கள். இதுதான் உலகத்தின் மையம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பாலித் தீவின் மிக முக்கியமான ஹிந்து மதக்கோயில் ஒன்று இந்த மலையின் சரிவில் அமைந்திருக்கிறது.

உலகில் சீற்றம் மிகுந்த எரிமலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் அகுங், வரலாற்றில் பல முறை எரிமலைக் குழம்புகளையும் சாம்பலையும் கக்கியிருக்கிறது. 1843-ஆம் ஆண்டு இதன் சீற்றம் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் அப்போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. 1963-ஆம் ஆண்டு மிகக் கடுமையான சீற்றம் காரணமாக லாவா குழம்புகள் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வீசப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். பல கிராமங்கள் சாம்பலாகின. ஆயினும் மலைச் சரிவில் இருந்த கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. கோயிலின் சில அடி தொலைவு வரை லாவா குழம்புகள் வந்த நிலையில், கோயிலுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை பாலி மக்கள் கடவுளின் கருணை என்று கொண்டாடினார்கள்.

தற்போது மீண்டும் சீறிக் கொண்டிருக்கிறது அகுங் எரிமலை. செம்டம்பர் மாதத்தில் சுமார் 850 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 25-ஆம் தேதி எரிமலைக் குழம்பு வெளியேறத் தொடங்கியது. ஆரஞ்சு நிறத் தீக்குழம்புகள், கரும்புகை, சாம்பல் ஆகியவை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தின. சுமார் 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தீவின் பெரும்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளிப்பதால், இயல்பு நிலை திரும்புவதற்குப் பல மாதங்கள் ஆகலாம் எனக் கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close