[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்

‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை

car-bomb-kills-maltese-journalist-who-exposed-panama-papers-link

பனாமா கேட் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வீசி கொல்லப்பட்டார்.

பனாமா நாட்டில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றின் உதவியோடு, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. 
இதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கி, சிக்கலில் மாட்டிக்கொண்டனர். 
இதை வெளிப்படுத்தியவர், மால்டா நாட்டை சேர்ந்த பெண் செய்தியாளர், டப்னே கருவானா கலீஜியா (53). இதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், மால்டாவில் உள்ள மோஸ்டா அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது குண்டு வீசப்பட்டது. குண்டு வெடித்த வேகத்தில், கார் ரோட்டில் இருந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close