[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சர்வதேச ஊடகங்களையும் ஆக்கிரமித்த ஜெயலலிதா ...!

jayalalithaa-news-was-featured-in-the-international-media

மறைந்த முதலமைச்சர்‌ ஜெயலலிதா குறித்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் இடம்பிடித்துள்ளது.

பிரபல செய்தி ஊடகமான பிபிசி, தனது இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், முதல் செய்தியாக ஜெயலலிதாவின் மறைவினை, இந்தியாவின் இரும்புப் பெண் மறைந்தார் என்ற தலைப்போடு இடம்‌பெற செய்துள்ளது. அதே போல கார்டியன் நாளிதழும் ஜெயலலிதாவை தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெலிகிராப்பும் முதல் செய்தியாக ஜெயலலிதாவின் மறைவு செய்தியை தங்களின் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, ஜெயலலிதாவின் மறைவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளது‌.

தி வாஷிங்டன் போஸ்ட், வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசியலில் நிலவிய பாலின பாகுபாட்டை உடைத்தெரிந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளது. ஆசிய நாளிதழ்கள் பலவும் குறிப்பாக மலேசியாவில் வெளிவரும் தி சன், இலங்கையில் வெளிவரும் டெய்லி நியூஸ், சிங்கப்பூரில் வெளிவரும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவையும் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை பிரதான செய்தியாக தங்களின் இணையப்பக்கங்களில் பதிவிட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close