[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பதற்றம் அதிகரிப்பு...இந்தியாவுக்கான புதிய தூதரை நியமித்த சீனா

after-blocking-un-ban-on-masood-azhar-china-appoints-new-envoy-to-india

இந்தியாவுக்கான புதிய தூதராக லுவோ ஜாவுஹியை நியமித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

பதான்கோட் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மவுலான மசூத் அசாருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவின் கோரிக்கையை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் சீனா இரண்டாவது முறையாக சனிக்கிழமை தடை செய்தது. மேலும், பிரம்மபுத்திரா அணையின் கிளை நதி மீது பிரமாண்ட அணை கட்டும் வேலைகளிலும் சீன ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற விவகாரங்களால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பினை சீனா வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான சீன தூதர் கடந்த ஏப்ரல் முதலே நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கனடாவுக்கான சீன தூதராகப் பதவி வகித்த லுவோ ஜாவுஹி புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான சீன தூதராக இருந்த லீ யூசெங் கடந்த ஏப்ரலில் சீனா திரும்பினார். அதன்பின்னர் அந்த பதவிக்கு யாரையும் சீனா நியமிக்காமல் மவுனம் காத்துவந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close