[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்திற்கு சட்டசபையை மாற்றியது ஏன்? முதலமைச்சர் கேள்வி

jayalalaitha-asking-question-in-dmk

தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டமன்றம் என்று கூறி விட்டு சபாநாயகரை பற்றி விமர்சித்தார்.

அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது,

உறுப்பினர், பேச்சின் தொடக்கத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிகுந்த இந்த சட்டமன்றப் பேரவை என்று குறிப்பிட்டார்கள். அவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேரவை என்பதால்தான் இதனையே தூக்கியெறிந்துவிட்டு, ஓமந்தூரார் எஸ்டேட்டில் கவிழ்ந்த கப்பல் போன்ற ஒரு கட்டிடத்தை எழுப்பி அங்கே கொண்டுபோய் வைத்தார்களா? எனக் கூறினார்.

மேலும், ஆய்வாளர்கள், இன்று தமிழ்நாடு நகர மாநிலமாக அதிவேகமாக மாறி வருவதாக சொல்கிறார்கள் என்றால் கிராமங்களில் உள்ள மக்களெல்லாம் குடி பெயர்ந்து நகரங்களுக்கு வருகிறார்கள் என்ற அர்த்தம் அல்ல. கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் இவைகளெல்லாம் மாநகராட்சி அந்தஸ்திற்கு படிப்படியாக உயர்ந்து வருகின்றன, வளர்ந்து வருகின்றன, முன்னேறி வருகின்றன என்பது பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close