காவிசாயம் பூசமுடியாது எனக்கூறிய ரஜினியால் அரைமணிநேரம் கூட அதே நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச்சாயம் பூச முடியாது என்று சொன்ன ரஜினிகாந்தால் அரை மணிநேரம் கூட அதே நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை. அவரே பூசி முழுகினார். விஜயகாந்த் பாராட்டுக்குரியவர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதிகாரத்தில் இருக்கும்போது மாற்றுக்கட்சியாக வருவேன் எனக்கூறுவதற்கு ஒரு துணிவு வேண்டும். ஆளுமை வேண்டும். அதையும் துணிந்து விஜயகாந்த் வந்தார்.
வெற்றிடம் இருப்பதால் தான் அரசியலுக்கு வருகிறீர்கள். இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்கள். இது எந்த மாதிரியான ஆளுமை. நீங்கள் ஆளுமையை பற்றி பேசக்கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். சிவாஜியை பற்றி பேசியது அவரை சிறுமை படுத்துவது போல் உள்ளது. எம்ஜிஆரை போல சிவாஜிக்கு அரசியல் நுட்பம் தெரியவில்லை. அவகாசம் தராமல் திட்டமிட்டு மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு