[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..!

cm-palanisamy-thanks-to-pm-modi

இந்திய- சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கும், இருபெரும் தலைவர்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இருபெரும் தலைவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு நல்கிய தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தலைவர்களை மகிழ்வித்த கலைஞர்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அமைச்சர்கள், அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close