[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

விபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி

chennai-accident-victim-to-get-compensation-after-20-year-delay

விபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து விபத்துக்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வளவு எளிதில் இழப்பீடு கிடைத்துவிடுவதில்லை. விபத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நீண்ட காலம் நடைபெறும். சில நேரங்களில் வழக்கு முடிவதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுவதும் உண்டு. வழக்கை நடத்துவதை விட விட்டுவிடுவதே மேல் என எண்ணும் நிலை ஏற்படும்.

இந்நிலையில், 1998 ஆம் ஆண்டில் நடந்த விபத்திற்கு தற்போது இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஜீப் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த குலோத்துங்கன் என்பவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்ட குலோத்துங்கனுக்கு ரூ1.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. போலீஸ் ஜீப் ஓட்டி வந்த டிரைவரின் கவனக்குறைவால்தான் விபத்து நிகழ்ந்ததாக அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குலோத்துங்கனுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

       

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரை எதிர்த்து தமிழக அரசு பூந்தமல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்திற்கு தற்போது வரை இழப்பீடு வழங்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், இரண்டு வாரத்திற்கு இழப்பீட்டு தொகையை உரிய நபருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close