[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வலி நிவாரண மாத்திரைகள் போதை மாத்திரைகளாக விற்பனை

drug-pill-sale-for-students-in-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாணவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்துவந்த கும்பல் சிக்கியது.

அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் போதைக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறி, அவரது தாய் நாகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அறந்தாங்கி துணைக் காவல் கண்காணிப்பாளர் கோகிலா மேற்பார்வையில் சிறப்பு குழுவை அமைத்து மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் உத்தரவிட்டார்.

ரகசியமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், புதுக்கோட்டையில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் ரியாஸ்கான் மற்றும் அவரது கூட்டாளி ஜெகன் ஆகியோரை வளைத்தனர். விசாரணையில், அவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை, நீரில் கரைத்து மாணவர்களுக்கு போதை ஊசிகளாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட மாத்திரைகளை வழங்கிய, கவுதம் ராஜா என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள மருந்துகடையில் வேலை செய்து வந்த கவுதம் ராஜா, உரிமையாளருக்கு தெரியாமல் மருந்துகளை ஆர்டர் செய்து, அதை ஜெகனின் மனைவி பானுமதிக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 18 ரூபாய்க்கு வாங்கிய மாத்திரைகளை அவர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளையடித்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. சுமார் இரண்டாயிரம் மாத்திரைகளை கைப்பற்றிய தனிப்படையினர், மொத்த கும்பலையும் கூண்டோடு கைது செய்தனர்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போதை கும்பலை கூண்டோடு சுற்றி வளைத்த அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close