[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தாக்க வந்த ரவுடிகள் - துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த எஸ்.ஐ

madurai-police-si-gun-shoot-for-warming-rowdies

தாக்குதல் நடத்த வந்த ரவுடிகளை எச்சரிக்க, காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சிவராமகிருஷ்ணன் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் காமராஜர் சாலையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இளைஞர்கள் சிலர் மது அருந்தியுள்ளனர். அதை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோது, அவர்கள் மறுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். 

மேலும், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஆயுதங்களோடு காவல் ஆய்வாளரைத் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. உஷாரான சிவராமகிருஷ்ணன் பாதுகாப்பு கருதி, தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அச்சுறுத்த முயன்ற ராஜகிருஷ்ணன், ரமேஷ் என்ற இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்த நிலையில், தலைமறைவான பழனிபாரதி என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close