[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

“பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்” - முதல்வர் பழனிசாமி

cm-palanisamy-request-to-farmers

உழவர்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்காக மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளுமாறு உழவர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நெல் ரகங்களின் விதைகளை போதுமான அளவிற்கு இருப்பு வைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு  ரூபாய் 600 மானியம் வழங்கப்படுவதாகவும், அதற்காக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close