[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

''எந்த அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது'' - ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

chief-minister-pazhanisamy-answer-to-staalin

எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் எனவும் உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனவும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். தேனியில் அமமுக தொண்டர்கள் திமுகவில் இணையும் விழாவில் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். 

இந்நிலையில், இன்று ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டரையும் தொட்டுப் பார்க்க முடியாது என ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close