[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

மரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் - காவல்துறை அதிரடி

district-police-have-confiscated-27-firearms-near-the-hill-villages-in-krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்கள் அருகே மரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத் துப்பாக்கிகளை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பல மலை கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ளவர்கள் வன விலங்குகளை வேட்டையாடவும், வன விலங்குகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் உரிமம் பெறாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அவர்கள் உரிமம் இன்றி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகள் சட்டப்படி குற்றம் எனக் காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், அஞ்செட்டி போலீசார் ஆகியோர் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு சென்று உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். 

இதனால் பலரும் நாட்டுத் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில் அஞ்செட்டி அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையிலுள்ள பூமரத்து குழி என்ற கிராமத்தில் கோயில் அருகிலுள்ள ஆலமரத்தடியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தி வந்த 27 நாட்டுத் துப்பாக்கிகளை கிராம மக்கள் வீசி சென்றுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்தது வந்த அஞ்செட்டி போலீசார் அங்கு சென்று 27 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த 21-ந் தேதி தேன்கனிக்கோட்டை அருகே ஏணிபெண்டா கிராமத்தில் 3 நாட்டுத்துப்பாக்கிகளும், வீரிசெட்டி ஏரி கிராமத்தில் 7 துப்பாக்கிகளும், ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் 9 நாட்டுத்துப்பாக்கிகளும் என மொத்தம் 19 துப்பாக்கிகளை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் அஞ்செட்டி அருகே 27 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் இதுவரை 46 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close