[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள் 

madurai-district-vijay-makkal-iyakkam

மேலூரில் விஜய் ரசிகர்கள் இணைந்து தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் பிறந்த நாளையொட்டி, தினமும் 100க்கும் மேற்பட்ட  முதியவர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.

 இதற்காக இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைத்து, மேலூர் சிவகங்கை சாலையில் ‘தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்’என தொடங்கி, தினமும் பலரது பங்களிப்புடன் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றனர்.

இதனால் முதியவர்கள் மட்டுமல்லாது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பல பிரிவினர் உதவி பெற்று வருகின்றனர். 

இது குறித்து முதியவர் கொண்டயன்,  “ரசிகர்கள் என்றால் அவர்களுடைய தலைவரின் பிறந்த நாள்போது மட்டும் உதவி வழங்குவார்கள். ஆனால் இவர்கள் வருடம் முழுவதும் ஏழைகளுக்கு தினசரி காலை உணவு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இது குறித்து விஜய் ரசிகர்கள், “மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் ஒன்றிணைந்து தினமும் 100க்கு மேற்பட்டோர்களுக்கு தரமான காலை உணவை வழங்கி வருகிறோம், இதனை இன்னும் அதிகப்படுத்தி 200க்கும் அதிகமான மக்களுக்கு உணவுகள் வழங்க  வேண்டும் என்பது எங்களின் ஆசை” என்றனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close