[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பாதுகாப்பாக இருக்கிறதா சென்னை ரயில் நிலையங்கள் ?

the-special-article-about-chennai-railway-stations-security-and-safe

2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. அண்மையில் சேத்துபட்டு ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை தாக்கிவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்தார் ஒரு இளைஞர். எனில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதா? அதன் நிலவரம் என்ன? என்பது குறித்து புதிய தலைமுறை செய்தியாளர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம்‌ போன்ற சில ரயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

Image result for நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

சுவாதி கொலை சம்பவத்தை அடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமிராக்களின் கட்டுப்பாட்டுஅறை எழும்பூரில் இருக்கிறது.

· எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில்தான் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

· நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று கோரிக்கையும் பயணிகள் மத்தியில் இருக்கிறது.

கிண்டி ரயில் நிலையம்

· கிண்டி ரயில் நிலையத்தில் மொத்தம் 4 நடை மேடைகள் உள்ளன

· நான்கு நடை மேடைகளிலும் ஒருவருடமாக பணிகள் நடந்து வந்தாலும் இதுவரை ஒரு சிசிடிவி கேமிரா கூட அமைக்கப்படவில்லை

· ரயில்வே காவலர் ஒருவர் மட்டும் பீக் அவரில் ரோந்துப்பணியில் இருக்கிறார்.

தாம்பரம் ரயில் நிலையம்

· தாம்பரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஒருலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

· அங்கு 48 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக ரயில்வே போலீசார் கூறுகின்றனர்.

· ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது பயணிகளின் உடமைகளையும் சோதிக்கும் கருவி செயல்படவில்லை.

· நடைமேடை உள்ளிட்ட இடங்களில் போதிய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இல்லை என்பது தாம்பரம் ரயில் நிலையத்தின் கள நிலவரம்.

Image result for நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

· சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 100க்கும் அதிகமான ரயில்கள் வந்து செல்கின்றன.

·  ரயில் நிலையத்திற்கு உள்ளே 98 சிசிடிவி கேமிராக்களும், ரயில் நிலையத்திற்கு வெளியே ஆங்காங்கே 12 சிசிடிவி கேமிராக்கள் என மொத்தம் 110 சிசிடிவி   கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

· மேலும் ரயில்வே பார்சல் பகுதியிலும் 16 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நுழைவு வாயில் எண் 3-ல் ஸ்கேனர் வசதி   செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6 நுழைவு வாயில்களில் மூன்றில் மட்டுமே ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் 6 ஆம் எண் நுழைவு வாயில்கள் துப்பாக்கி   ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்

· இந்த சூழலில் சிசிடிவி கேமிராக்கள் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குற்றங்களின் சாட்சிகளாக நிற்கும் கண்காணிப்புக் கேமராக்களை அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் ஒருபுறம் இருக்க, குற்றங்களை தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையே பொரும்பாலும் நீடிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close