[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையே தமிழக மக்களுக்கு வெற்றி” - ஸ்டாலின்

congress-manifesto-is-victory-for-tamil-nadu-peoples

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தங்கள் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்புக்குரியது எனத் தெரிவித்துள்ளார். ஏழ்மை ஒழிப்புத் திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியச் சாதனையாக அமையப்போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

விவசாயக் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற மாநில அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு‌ காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழர்களின் குரலுக்கு அக்கட்சி அளித்திருக்கும் மதிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே காங்கிரஸ் அறிக்கையால் தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close