[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை ! என்ன காரணம் ?

3-suicide-in-one-family-near-salem

சேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பூலாவரி அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்- சுமதி தம்பதியினர். வழக்கத்திற்கு மாறாக இன்று ராஜ்குமாரின் வீடு வெகு நேரம் திறக்கப்படாமலேயே இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் பார்த்துள்ளனர். அப்போது ராஜ்குமார் அவரது மனைவி சுமதி மற்றும் மகள் ரம்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜ்குமார் சுமதி தம்பதியின் மகள் ரம்யா தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். அவர் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:
Related Tags : சேலம்தற்கொலைSalemSuicide
Advertisement:
Advertisement:
[X] Close