[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இந்தியக் குடியரசு கட்சி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு

makkal-needhi-maiam-alliance-party-candidate-nomination-was-rejected-by-election-commission

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்தக் கட்சிக்கு காஞ்சிபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட இந்தியக் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் வேட்பாளர் தங்கராஜ் மனுவில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அவரது மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்ந்த கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் செந்தில் குமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் காலதாமதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாகவும் கூறி அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். இதனால் மக்கள் நீதி மய்யத்தினர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வேட்பு மனு ஏற்கப்படாததால், மக்கள் நீதி மய்யம் பெரம்பலூரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close