[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“போலி விண்ணப்பங்களை விநியோகித்தவர்களை கண்டுபிடியுங்கள்” - நெல்லை மக்கள் கோரிக்கை

people-have-an-application-for-obtaining-rs-1-lakh-in-pm-scheme-for-self-employment-at-tirunelveli

பிரதமர் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானிய சலுகையில் ரூபாய் 1 லட்சம் பெறுவதற்காக விண்ணப்பத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் சில தினம் முன்பு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் நலிவடைந்த ஏழை எளிய மக்கள் சுய தொழில் தொடங்க பாரத பிரதமர் மானிய சலுகையில் ரூபாய் 1 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தாங்கள் கொண்டு வந்த மனுக்களுடன்,வங்கி கணக்கு நகல், ஆதார் நகலுடன் இணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் மக்கள் போட்டுச் சென்றனர்.  

இதனைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் ஆயிரகணக்கானோர் விண்ணப்ப மனுக்களுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். 

இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மனு பெட்டியில் போட அறிவுறுத்தினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் இதுபோன்று மத்திய அரசின் திட்டத்திற்கான விண்ணப்பத்தை யார் வழங்கினார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தினந்தோறும் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஏழை மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close