[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஈரோடு அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை..!

elder-couple-murdered-near-erode

சென்னிமலை அருகே வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கோனார்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி துளசிமணி இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது மகனான வெங்கடேஷ் பொள்ளாச்சிக்கு கோயிலுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் கணவன் மனைவி இருவர் மட்டும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் வீட்டின் கதவு திறந்து இருப்பதையும், நீண்டநேரமாகியும் இருவரும் வெளியே வராததால் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது துரைசாமி மற்றும் அவரது மனைவி துளசிமணி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டும் இரும்புக்கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்டும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவே கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை துணைகண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்திய போலீசார், வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close