[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

திரைப்பட பாணியில் ஆசையைத் தூண்டி நூதன மோசடி ! ஓட்டல் உரிமையாளர் கைது

namma-unavagam-owner-kasim-got-arrested-at-chennai

ஒருமுறை முதலீடு செய்தாலே போதும் உங்ளைத்தேடி பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்றும் ஆசையை தூண்டி கோடிக் கணக்கில் மோசடி செய்த நம்ம உணவகம் உரிமையாளர் முகமது காசிமை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த முகமது காசிம் என்பவர் நம்ம உணவகம் என்ற உணவகத்தை தொடங்கினார். பல இடங்களிலும் கிளைகளாக தொடங்க அவர் பலரிடம் முதலீடுகளை பெற்றுள்ளார். சென்னை வடபழனியில் நம்ம உணவகத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கியுள்ளார். அங்கு சமைக்கப்படும் உணவுப்பொருட்கள் சென்னையின் பல இடங்களிலும் அமைக்கப்பட உள்ள கிளைகளில் விற்கப்படும் என்பதே முகமது காசிமின் வாக்குறுதி. அதாவது உணவுகள் தேடி வந்துவிடும், கிளைகள் அமைத்து விற்றால் மட்டுமே போதும் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய பலரும் நம்ம உணவகத்தின் கிளைகளை தொடங்க முதலீடு செய்துள்ளனர்.

அவர் கூறியது போலவே உணவகத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு வியாபாரம் நடந்துள்ளது. ஆரம்ப காலங்களில் சரியாக லாபத்தை பங்கிட்டு கொடுத்த முகமது காசிம், சில மாதங்கள் சென்ற நிலையில் ஏமாற்றத் தொடங்கியுள்ளார். பணம் வராததால் முதலீடு செய்த பலரும் முகமது காசிமை தொடர்புக் கொண்டுள்ளனர். பணம் வரும் என்று உறுதி அளித்த காசிம், சில நாட்களில் தலைமறைவானார்.

இதனையடுத்து அருண் வெங்கட்ராமன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் சென்னையில் வைத்து முகமது காசிமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முகமது காசிம் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரும் புகார் அளித்துள்ளனர். பலரிடம் முதலீடு பெற்ற காசிம், 42 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close