[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்

vijayakanth-returns-to-chennai-on-saturday

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் நாளை மறு நாள் சென்னை திரும்புகிறார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேல் சிகிச்சைக்காக கடந்த, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத் துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதை மறுத்த அவர் மகன் விஜய பிரபாகரன், அவர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறியிருந்தார். 

இதற்கிடையே சிகிச்சை முடிந்து அவர், நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். சென்னை வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அவர் சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனால் தேமுதிக தொண்டர் கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close