[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கோடநாடு கொலை வழக்கில் சயான், மனோஜ் ஜாமீன் ரத்து

syan-manoj-bail-off-about-kodanadu-killed-issue

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு தரப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி சென்ற மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து நிபந்தனைகளின் அடிப்படையில் இருவரையும் விடுவித்தார். அத்துடன் கடந்த ஜனவரி 18ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் உத்தரவிட்டார்.

அதன்படி, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரினார். ஜாமீன் வழங்க வேண்டுமென்றால் ஜாமீன் உத்தரவாதம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் இரண்டையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால், இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருவதால் சயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சயான், மனோஜ் ஆகியோருக்கு தரப்பட்டிருந்த ஜாமினை ரத்து செய்து நீலகிரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறபித்து உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close