[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பரிதாபமாக உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைகள்

3-jallikattu-cows-die-for-poison-mixing-in-food-in-krishnagiri

கிருஷ்ணகிரியில் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்டு வந்த 3 காளைகள் தீவனம் சாப்பிட்டு உயிரிழந்தன. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவரது தாத்தா நாராயண கவுடு பல ஆண்டுகளாக பாரம்பரிய நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். அத்துடன் இவர் மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட போட்டிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். நாராயண கவுடுவின் பேரன் ரகுவும் 14 நாட்டு காளை மாடுகளை, எருதுவிடும் விழாவிற்கு தயார்படுத்தி வருகிறார். இவை அலிகர் நாட்டுவகை காளைமாடுகளாகும். 

இதில் மகாராணி என்ற பட்ட பெயர் கொண்ட காளை பல ஊர்களில் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று புகழ் பெற்ற காளையாகும். இந்நிலையில் ரகு வழக்கம்போல், தவுடு கலந்த தீவனத்தை தனது ஐந்து காளை மாடுகளுக்கு வரிசையாக வழங்கினார். அப்போது உணவை உண்ட மாடுகளில் நான்கு காளை மாடுகள் நிலைதடுமாறி உள்ளன. எச்சரிக்கையடைந்த மாட்டு உரிமையாளர்கள் மீதமிருந்த மற்ற மாடுகளுக்கு தீவனம் வைக்கவில்லை. இதையடுத்து மாடுகள் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியது. உடனே கால்நடை மருத்துவரை ரகு அழைத்து வந்துள்ளார். 

கால்நடை மருத்துவர் ஒருமணி நேரமாக அளித்த சிகிச்சை பலனளிக்காமல், மூன்று நாட்டு காளைமாடுகள் மாட்டு தொழுவத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு காளைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசை ஆசையாக வளர்த்த மூன்று மாடுகள் அடுத்தடுத்து கண் முன்னிலையிலே உயிரிழந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் கதறி அழுதது, பார்ப்போரையும் கண் கலங்க வைத்தது. மாட்டின் உரிமையாளர் ரகு, மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் விஷம் கலந்திருந்தாலேயே மாடுகள் உயிரிழந்ததாக சந்தேகித்து, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதற்கிடையே இறந்த மூன்று காளை மாடுகளுக்கும் ஊர் பொதுமக்கள் பூஜை செய்தனர். மேலும், காளைகள் இறந்த செய்தி கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அவற்றை காண உரிமையாளரின் வீட்டிற்கு திரண்டுள்ளனர். உயிரிழந்த மாடுகளின் தற்போதைய மதிப்பு சுமார் 10 லட்சத்திற்கு மேல் என சொல்லப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close