[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 25 நாய்கள் 

25-stray-dogs-found-dead-along-cooum-banks-in-chennai-poisoning-suspected

சென்னையில் 25 க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மக்கீஸ் கார்டன் பகுதிக்கு பின்புறம் கூவம் ஆறு ஓடுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான நாய்கள் உள்ளன. இந்நிலையில்  மாக்கீஸ் கார்டன், கிரீம்ஸ் சாலையில் 25 க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதைப்பார்த்த அப்பகுதியினர் கால்நடைகள் பராமரிப்பு அறக்கட்டளை நிறுவனர் சாய் விக்னேஷுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சாய் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துகிடந்த நாய்களை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் ஐபிசி 429, விலங்குகள் கொலை செய்வது, விலங்குகளை சித்ரவதை செய்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இறந்த நாய்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கால்நடைகள் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கால்நடைகள் பராமரிப்பு அறக்கட்டளை நிறுவனர் சாய் விக்னேஷ் கூறுகையில், அப்பகுதியில் உள்ள சிலர் தான் நாய்களுக்கு உணவில் விஷம் வைத்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுவதாகவும் அரசியல் பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார். இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close