[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி

bjp-implement-most-central-government-schemes-in-tamil-nadu-pm-modi

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசே தமிழகத்தில் அதிகமான நலத்திட்டங்களை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"என் வாக்குச்சாவடி, வலுவான வாக்குச்சாவடி" என்ற தலைப்பில் தமிழகத்தில் கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, சேலம், நீலகிரி
ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது
பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மத்திய அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டார். 

தமிழக கிராமப்புறங்களில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டார். 4 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா திட்டத்தின் கீழ்
லட்சக்கணக்கானோருக்கு கடன் அளிக்கப்படுள்ளதாகவும் கூறினார். பல்வேறு திட்டங்களை பட்டியிலிட்ட மோடி, மத்திய அரசின்
திட்டங்கள் எந்தளவிற்கு தெரியும் என நிர்வாகிகளிடம் கேட்டார். 

விவசாயிகளுக்கு மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களையும் கேட்டறிந்தார். ஆயுஷ்மான் என்ற மத்திய அரசின் காப்பீட்டுத்
திட்டத்தின்கீழ் 3 மாதங்களில் 5 லட்சம் பேர் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். மத்திய அரசின்
திட்டங்களை மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close