[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

திமுக பொருளாளர் துரைமுருகனின் பாஸ்போர்ட் செல்லும் : உயர்நீதிமன்றம்

the-passport-issued-to-duraimurugan-will-be-valid-till-2023-high-court

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் 2023 வரை செல்லுபடியாகும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவு.

திமுகவின் முன்னாள் அமைச்சரரும் தற்போதய பொருளாளரருமான துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு சொந்தமான சென்னை மற்றும் வேலூர் பகுதியிலுள்ள வீடுகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என 9 இடங்களில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வருமானத்துக்கு அதிகமாக ₹ 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்ததால் துரைமுருகனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

Related image

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி துரைமுருகன் மனு தாக்கல் செய்தார். இதனைதொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்து அந்த சொத்துகுவிப்பு வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

Image result for chennai high court

இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த பிறகும் புதிய பாஸ்போர்ட் புத்தகம் வழங்க மறுப்பதாக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்  2013ல் துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் 2023 வரை செல்லுபடியாகும் எனவும் அதில் பக்கங்கள் தீர்ந்தால் மீண்டும் விண்ணப்பித்தால் நான்கு வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு 
சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close