[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை திமுக எம்.பி ஆகின்றனர்

dmk-s-r-s-bharathi-and-tks-elangovan-chosen-as-candidates-for-rajya-sabha-elections

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் 6 உறுப்பினர்கள் உள்பட 57 உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து மாநிலங்களவை தேர்தலுக்குக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். போதிய பலம் இருப்பதால் இரண்டு பேரும் மாநிலங்களவை எம்பியாவது உறுதியாகியுள்ளது. எஞ்சிய 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அதிமுக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதி கிருஷ்ணன், முன்னாள் பத்திரிகையாளர் ஏ.டபிள்யூ.ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன் மற்றும் காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் எம்.பி பதவி வரும் ஜுன் 29-ல் காலியாக உள்ளது. இந்த 6 எம்.பி பதவிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close