[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்
  • BREAKING-NEWS பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல்

பாடகி சின்மயிக்கு கர்நாடக இசை கலைஞர்கள் ஆதரவு

carnatic-musicians-supported-for-chinmayi-allegations-to-vairamuthu

பின்னணி பாடகி சின்மயிக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து சின்மயி ட்விட்டரில் மகிழ்ச்சியை

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் புகாரை அடுத்து தமிழகத்திலும் மீ டூ (#MeToo)  விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயின் புகார் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சின்மயி, கர்நாடக சங்கீத உலகத்திலும் அவ்வளவு அட்டூழியம் நடக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு தனது ட்விட‌டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சின்மயி, தனக்கு ஆதரவு கரம் நீட்டிய கர்நாடக இசைக் கலைஞர்களின் பட்டியலையும் இணைத்துள்ளார். அதில் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் கண்ணிய குறைவாக நடந்து கொள்ளும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டியது அவசியம் என கர்நாடக இசைக் கலைஞர்கள் வலியுறுத்தி இருக்கும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், சின்மயி போன்றவர்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கர்நாடக சபாக்களும், கலாசார அமைப்புகளும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் கர்நாடக இசை சமூகமும் பாதுகாப்புடன் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close