[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

cell-theft-boy-murder-in-karur

கரூரில் செல்போனை திருடியதாகக் கூறி 15 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட ச‌ம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே அல்லாளிக் கவுண்டனூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், தனது தந்தை இறந்துவிட்டதால் தாய் இலஞ்சியத்துடன் வசித்து வந்தார். இவர் சிறிய அளவிலான பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த சிறுவன் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனின் வீட்டிற்கு சென்ற சிலர் சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. 

மகனை தாக்கியதை கண்டதும் தாய் இலஞ்சியம், தன்னையும் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளான். இதுகுறித்து வெள்ளியணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த துணை காவல் காண்காணிப்பாளர் கும்மராஜா, சிறுவனை அடித்து கொன்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close