[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

மொபைல் திருடர்கள் மூன்று பேருக்கும் ஒரே மாதிரி அடி: போலீஸ் வேலையா?

mobile-snatchers-slip-and-injured-in-police-station

போலீசாரிடம் இருந்து செல்போன் திருடியதாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் கையில் கட்டுப்போட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் கடந்த 2-ஆம் தேதி நடந்து சென்றிருக்கிறார். அப்போது பல்சர் பைக்கில் வந்த மூன்று நபர்கள் காவலரின் கைப்பேசியை பறித்துச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் மயிலாப்பூர் பகுதியில் ஆங்காங்கே செல்போன் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்ததால் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதவிர இவர்களின் கூட்டாளியான மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் போலீசாரிடம் இருந்து செல்போன் திருடியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களில் 3 பேர் கையில் கட்டுப்போட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் மூவருக்கும் ஒரே மாதிரி வலது கையில் அடிபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. ஒருவர் வாயை பொத்திக் கொண்டும், மற்றொருவர் கண்களை மூடிக்கொண்டும், இன்னொரு நபர் காதை மூடிக் கொண்டும் காந்தி பொம்மைகளை போல் உட்கார்ந்து இருப்பதாக அந்தப் புகைப்படம் உள்ளது. அதாவது ‘கெட்டதை பார்க்க மாட்டோம்,கெட்டதை பேச மாட்டோம், கெட்டதை கேட்க மாட்டோம்’ என்பதை உணர்த்தும் விதமாக அவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த மூவரும் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் கூறப்படுகிறது. இதில் ஒரு இளைஞரின் பெயர் ‘பேய்குழந்தை’ என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close