[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் விஜயா தஹில் ரமாணி

justice-vijaya-kamlesh-tahilramani-to-be-chief-justice-of-madras-high-court

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமாணி இன்று பதவியேற்கிறார். 

ஆளுநர் மாளிகையில் அவரது பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தஹில் ரமாணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான தஹில் ரமாணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:

1958ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தஹில் ரமாணி பிறந்தார். 1982ஆம் ஆண்டு ஜூலையில் மும்பை மற்றும் கோவா பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார். கீழ் நீதிமன்றங்களிலும் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். தந்தையுடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்த தஹில்ரமாணி, பல கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பின்னர் அவர் மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுவரை பகுதி நேர பேராசிரியராக சட்டக் கல்லூரி ஒன்றில் பணியாற்றியுள்ளார். 

1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், பல வழக்குகளில் வெற்றி தேடித்தந்தார். 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில்ரமாணி, பின்னர் அந்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உயர்ந்தார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தஹில்ரமாணி பெற்றுள்ளார்,.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close