[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

அண்ணா அணிவித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்..!

karunanidhi-buried-with-anna-ring-at-marina-beach

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது  உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் துக்கம் தாங்காமல் கண் கலங்கினர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.

1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது. திமுகவின் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் கருணாநிதி. எனவே கருணாநிதிக்கு அண்ணா தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். அண்ணா அணிவித்ததால் அந்த மோதிரத்தை ஒருபோதும் கழட்டியதே இல்லை கருணாநிதி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கருணாநிதியின் அந்த மோதிரம் கழட்டப்படவில்லை. கருணாநிதி உடலோடு ஒன்றாகிவிட்ட அந்த மோதிரம் அவர் உடல் அடக்கம் செய்யப்படும்போதும் கழட்டப்படவில்லை. அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய திமுக நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றது. அதைப்போல அண்ணா அணிவித்தை மோதிரத்தை கழட்டாமலே கருணாநிதி உடலை அடக்கம் செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close