[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

tn-cm-edappadi-palanisamy-condolences-to-dmk-chief-karunanidhi-death

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்ற சிறப்புக்குரியவர். சமூக நீதிக்காக போராடியவர். அரசியல் மட்டுமின்றி, தமிழ் இலக்கியம், தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதை, வசனம் போன்ற துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது மகனும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close